குணசேகரனின் ஆஸ்தான டயலாக்கை வைத்து பங்கம் பண்ணும் பாலா... இணையத்தில் வைரலாகும் பாலாவின் ரீல்ஸ்
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் ஆதிகுணசேகரனுடன் ரீல்ஸ் செய்து அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார் KPYபாலா.
KPYபாலா
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு சீசன் 6 இல் கலந்துக் கொண்டு டைட்டில் பட்டத்தை பெற்றவர் பாலா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இவரின் நகைச்சுவை வைத்து அனைவரிடமும் ரகளை செய்துக் கொண்டிருப்பார். பாலா தற்போது சில படங்களில் நடித்தும் வருகிறார் அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
குணசேகரனுக்கு ஆட்டம் காட்டிய பாலா
இந்நிலையில், தற்போது பலரின் விருப்ப சீரியல்களில் ஒன்றாக மாறியிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் ஆதிகுணசேகரனிடம் வம்பிழுத்து ரீலஸ் செய்திருக்கிறார் பாலா.
எதிர்நீச்சல் சீரியலில் கனிகா, மாரிமுத்து, சத்தியப்பிரியா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த், மதுமிதா, என ஒரு பெரிய பட்டாளமே தங்களுக்கு கொடுத்த கேரக்டரில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார்கள்.
ஆனாலும் இந்த சீரியலில் ஆதிகுணசேகரனின் அந்த ஒற்றை வார்த்தை தான் சீரியலின் பிளஸ் பொயின்ட் எனவும் சொல்லலாம் அந்த வார்த்தை தான் “ஏம்மா ஏய்” இந்த வார்த்தை வைத்து ஆதிகுணசேகரனிடம் ரீல்ஸ் செய்து ரகளை செய்திருக்கிறார் பாலா.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |