Ethirneechal: கருமாதி வீடாக மாறிய திருமண வீடு.. அறிவுக்கரிசி செய்த சம்பவம்- பதற்றத்தில் ஜனனி
திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற தலைகணத்தில் அறிவுக்கரிசி முக்கியமான நபரை கொலைச் செய்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது சீரியல் குணசேகரன் செய்த காரியத்தினால் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தை பயன்படுத்தி தர்ஷன்- அன்புக்கரிசி திருமணத்தை நடத்தி விடலாம் என திட்டம் போடுகிறார்.
இதனை தொடர்ந்து தர்ஷனனுக்கு மயக்க மருந்து கொடுத்து அன்புக்கரசிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முயற்சியில் அறிவுக்கரசி மருந்து கொடுக்க, அதற்கு சக்தி வைத்தியம் செய்து தர்ஷனனை சுய நினைவுக்கு கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், தன்னுடைய காதலுக்காக உயிரை பணயம் வைத்திருக்கும் பார்கவி, ஜீவானந்தம் உதவியுடன் மண்டபத்திற்கு அருகில் வந்து விடுகிறார். அசந்த நேரத்தில் மருமகள்கள் தன்னுடைய திட்டத்தை நடத்தி விடுவார்கள் என குணசேகரன், கதிர் இருவரும் உஷாராகவே இருக்கிறார்கள்.
கொலைச் செய்ய துணிந்த குணசேகரன்
இது ஒரு புறம் இருக்கையில், நலங்கை பூர்த்தி தர்ஷன் வெளியில் செல்லலாம் என பார்க்கும் பொழுது அன்புக்கரசி தடுத்து நிறுத்துகிறார். அதே சமயம் திருமணத்திற்கு தடையாக அந்த காணொளி இருப்பதால் காணொளியை வைத்து மிரட்டல் விட்டுக் கொண்டிருந்த நபரை அறிவுக்கரிசி கொலைச் செய்கிறார்.
இந்த கொலையை தொடர்ந்து குணசேகரன் கோல் செய்து, “மூன்று உயிரில் யாரும் மிஞ்சக் கூடாது..” என அடுத்த கட்டளையை போட வெளியில் காத்திருந்த அடியாட்கள் மெது மெதுவாக ஜனனி இருக்கும் இடத்திற்கு நெருங்குகிறார்கள். திருமணம் நடக்கவிருந்த வீட்டில் அடுத்தத்தடுத்து கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
கடைசியில் பார்கவி தர்ஷன் இணைவார்களா? என்பதை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |