Ethirneechal: மீண்டும் நீலாம்பரியாக வந்திறங்கிய அறிவுக்கரசி... வெறித்தனமான செயலால் ஆடிப்போன குடும்பம்
எதிர்நீச்சல் சீரியலில் சிறையிலிருந்து அறிவுக்கரசியினை குணசேகரன் வெளியே கொண்டுவந்ததுடன், அவரது வீட்டிற்கே வந்து அதிரடி காட்டியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் பல திருப்பங்களைக் கொண்டு செல்கின்றது. குணசேகரனின் சொத்துக்கள் அவருடையது அல்ல என்ற உண்மை சமீபத்தில் தெரியவந்துள்ளது.
பெண்களை அடக்கி காரியத்தை சாதித்த குணசேகரன் சமீப காலமாக தோல்வியினை சந்தித்தார். இதனால் மனமுடைந்து வீட்டைவிட்டு ராமேஸ்வரத்திற்கும் சென்றார்.
பின்பு வீடு திரும்பிய அவர் மீண்டும் வில்லத்தனத்தினை காட்ட ஆரம்பித்துள்ளார். ஆனால் குணசேகரன் தற்போது வைத்திருக்கும் சொத்துக்கள் அனைத்தும் வேறு ஒருவருடையது.

ஆம் குணசேகரனின் அப்பாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தேவகி என்பவருடைய சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கி திருமணம் செய்துள்ளார்.
பின்பு குணசேகரனின் தந்தை இறந்த பின்பு குணசேகரனுக்கு உண்மை தெரிந்ததும், தேவகியை கொலை செய்ததும், அவரது மகன் ராணாவை ஊரைவிட்டே விரட்டியுள்ளார்.

மீண்டும் வந்த அறிவுக்கரசி
இந்த உண்மையை அறிந்து வீடு திரும்பிய சக்தியை ஜனனியின் அப்பாவின் சொந்தக்காரரை வைத்து குணசேகரன் கடத்தி சித்ரவதை செய்ய கூறியுள்ளார்.
ஆதலால் சக்தியைக் காப்பாற்ற வீட்டைவிட்டு சென்ற நிலையில், வீட்டில் உள்ள பெண்களை மீண்டும் அடிமையாக கொண்டு வந்ததுடன், தர்ஷன் பார்கவி திருமணத்தை நடக்காதது போன்று மாற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி அன்புவிற்கும், தர்ஷனுக்கும் திருமணம் நடந்தது போன்று பதிவு செய்து போலிசாரிடமும் எழுதி வாங்க கூறியுள்ளார்.
மேலும் அன்புக்கரசி தர்ஷனை தன்னுடன் வைத்துக் கொண்டார். இந்நிலையில் மீண்டும் அறிவுக்கரசி வீட்டிற்குள் நுழைந்ததுடன், இதெல்லாம் தனது திட்டம் தான் என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சிறையில் இருந்த வெறியை வீட்டிற்கு வந்ததும் முதன்முதலில் சாப்பாடு மூலமாக தீர்த்துள்ளார். இத்தருணத்தில் ஜனனிக்கு உதவி செய்யப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |