ஈஸ்வரியை விவாகரத்து செய்ய நினைத்த குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறும் நிலை... பரபரப்பான ப்ரொமோ
எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் ஈஸ்வரியை காதலித்த விடயம் குணசேகரனுக்கு தெரியவந்த நிலையில் ஈஸ்வரியை விவாகரத்து செய்வதற்கு முடிவெடுத்துள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் சொத்தில் 40 சதவீதம் ஷேர் ஜீவானந்தம் பெயரில் இருந்துள்ளது.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து சொத்தை மீட்க நினைத்த குணசேகரன் ஆட்களை அனுப்பி அவரை கொலை செய்ய நினைத்த நிலையில், அவருக்கு பதிலாக மனைவியை கொலை செய்துள்ளனர்.
ஈஸ்வரியின் தந்தை குணசேகரன் வீட்டிற்கு வந்து ஜீவானந்தம் பெண் கேட்டதாக கூறி உண்மையை அறிந்த நிலையில், தற்போது ஈஸ்வரியை விவாகரத்து செய்வதற்கு குணசேகரன் முடிவெடுத்துள்ளார்.
ஆனால் அப்பத்தா மாஸ் எண்ட்ரி கொடுத்து தனது பவரை காட்டிவரும் நிலையில், குணசேகரன் வீட்டைவிட்டு வெளியேறும் நிலைக்கு வந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |