Ethirneechal: சக மாணவனுடன் ஆட்டோவில் சென்ற ஐஸ்வர்யா... ஒருவழியாக கண்டுபிடித்த ஜனனி
எதிர்நீச்சல் சீரியலில் காணாமல் போன ஐஸ்வர்யா சிசிடிவி கமெரா மூலம் ஜனனியிடம் வசமாக சிக்கியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
குடும்பத்தில் தங்களது முடிவிற்கு எதிர்ப்பு கிளம்பினாலும், மிகவும் உறுதியாகவே பெண்கள் இருந்து வருகின்றனர்.
குறித்த சீரியல் தற்போதும் பரபரப்பாகவே சென்று கொண்டிருக்கின்றது. சிறையில் இருக்கும் குணசேகரனின் சொத்தை கையில் வைத்துக் கொண்டு கதிர் பல திருட்டு வேலைகளை செய்து வருகின்றார்.
இந்நிலையில் பள்ளிக்கு சென்ற ஐஸ்வர்யா இன்னும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர். மற்றொரு புறம் தர்ஷன் கதிர் பக்கம் சாய்ந்து அவர் கூறுவதற்கு எல்லாம் தலையை ஆட்டி வருகின்றார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா வகுப்பு தோழனுடன் ஆட்டோவில் ஏறிச்செல்லும் சிசிடிவி காட்சியினை ஜனனி அவதானிக்கிறார்.
இதுவரை எந்தவொரு தகவலும் ஐஸ்வர்யா விடயத்தில் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது சக மாணவனுடன் ஆட்டோவில் ஏறிச் செல்வது ஜனனிக்கு தெரியவந்துள்ளது.
ஐஸ்வர்யாவின் தாய் ரேணுகாவும் ஆட்டோவில் அழுதுகொண்டு ஜனனியை தேடி வருகின்றார். சக்தி மற்றும் ஜனனி ஐஸ்வர்யாவை கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்துச் செல்வார்களா? என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |