நள்ளிரவில் விபத்தில் சிக்கிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை! படுகாயமடைந்த பொலிசார்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடித்து வரும் மதுமிதா விபத்தில் சிக்கியுள்ள நிலையில், பொலிசார் ஒருவர் காயமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்நீச்சல் ஜனனி
நடிகர் வேல ராமமூர்த்தி, கனிகா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் மதுமிதா எச்.
இவர் குறித்த சீரியலின் படப்பிடிப்பினை முடித்து வரும் பொழுது இவரது கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் பொலிசார் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளார்.
நடிகை மதுமிதா எச் பிரபல ரிவியில் பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியலில் அறிமுகமானார். குறித்த சீரியல் அதிக வரவேற்பை கொடுக்காத நிலையில், தற்போது நடித்து வரும் எதிர்நீச்சல் சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளது.
ஆண் நண்பருடன் காரில் சென்ற மதுமிதா
இவர் ஆண் நண்பர் ஒருவருடன் காரில் சென்று கொண்டிருந்த போது, சோழிங்கநல்லூர் பகுதியில், விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பொலிசார் ஒருவர் காயமடைந்த நிலையில், அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களாம்.
இது குறித்து மதுமிதா மற்றும் அவரது நண்பரிடம் விசாரித்தபோது, எதிரே வந்த பொலிசார் மீது தான் தவறு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் விபத்து ஏற்பட்டு இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில், மதுமிதா இதுவரை வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டுள்ளார். தற்போது இந்த விபத்து தொடர்பான தகவல் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |