Ethirneechal: மிருகமாக மாறிய ஞானம்... பரிதாப நிலையில் ரேணுகா
எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா நடனம் கற்றுக் கொடுப்பதை ஞானம் வந்து தடுத்துள்ளதுடன், சரமாரியாகவும் அவரை தாக்கியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
ஆனால் பெண்கள் அனைத்து சவால்களையும் எதிர்த்து போராடி வருகின்றனர். குணசேகரன் சொத்து கதிர் கைக்கு சென்றுள்ள நிலையில், பல திருட்டு வேலையில் ஈடுபட்டு வருகின்றார்.
ஐஸ்வர்யா காணாமல் போனதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கதிர், ஞானத்தை மூளை சலவை செய்து தனது பக்கம் இழுத்துள்ளார்.
இதனால் கோபத்தில் பொங்கி எழுந்த ஞானம் ரேணுகா நடனம் கற்றுக் கொடுக்கும் இடத்திற்கு சென்று சரமாரியாக அவரை இழுத்து வந்துள்ளார்.
ஜனனியின் மிகவும் நக்கலாக கதிர் வாயடித்து வந்துள்ளார். குணசேகரன் வந்த பின்பு கதிரின் நிலை என்னவாகும் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
![முதன்முறையாக விமானத்தை ஓட்டும் பைலட்டின் சட்டை கிழிக்கப்படுவது ஏன்?](https://cdn.ibcstack.com/article/24b66abf-6677-459c-b9ce-1e1f33b18c9b/25-67ae080907cc3-md.webp)