முதல் முறையாக மாமியாரை எதிர்த்த ஈஸ்வரி.. கதையை மாற்றிய குணசேகரன்- தவிப்பில் குடும்பத்தினர்
எதிர்நீச்சல் சீரியில் முதல் முறையாக தன்னுடைய மாமியாரை ஈஸ்வரி எதிர்த்து பேசியுள்ளார்.
சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியலின் கதை மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் பெண்களின் அடிமைத்தனத்தை மையமாக கொண்டு நகர்த்தப்படுகின்றன.
இதில் பல சினிமா பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
அந்த வகையில் முக்கிய கதாபாத்திரமான குணசேகரனின் மனைவி ஈஸ்வரி தன்னுடைய மகள் தர்ஷினியை தொலைத்து விட்டு கவலையோடு வீட்டிற்குள் வருகிறார்.
மாமியாரிடம் எகிறிய ஈஸ்வரி
அப்போது விசாலாட்சி ஜாண்சி ராணியுடன் இணைந்து கொண்டு கலாய்க்கும் வகையில் பேசுகிறார். இவர்களின் கதையால் கடுப்பான ஈஸ்வரி முதல் தடவையாக மாமியாரை எதிர்த்து பேசியுள்ளார்.
இப்படியொரு நிலையில் குணசேகரன் பொலிஸாரை பார்த்த பின்னர், “ தன்னுடைய மனைவி தான் பெண்ணை இன்னொரு இளைஞருடன் அனுப்பி விட்டு நாடகம் ஆடுகிறார்..” என கதையை மாற்றி கூறுகிறார்.
ஏற்கனவே கடுப்பில் இருந்த ஈஸ்வரி குணசேகரனுடன் பேசுவதற்காக முன் வருகிறார். இவ்வளவு பிரச்சினை சென்றாலும் வீட்டிலுள்ளவர்கள் தர்ஷினி குறித்து கவலையில் இருக்கிறார்கள்.
தர்ஷினிக்கு என்ன நடந்தது என தெரியாமல் ஜனனி- சக்தி கரிகாலனிடம் சண்டைக்கு செல்கிறார். இப்படியாக இன்றை நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |