எதிர்நீச்சலில் குணசேகரனை கழட்டி விட்ட இயக்குனர் - இத எதிர்பாக்கலையே
எதிர்நீச்சல் சீரியலில் தற்போது முக்கியமான கதாபாத்திரமான குணசேகரனை கதைக்களத்தில் பெரிதாக பார்க்க முடியவில்லை. இதை ரசிகர்கள் அவதானித்துள்ளனர்.
Super Singer 11: சூப்பர்சிங்கரில் ஐந்தாவது ஃபைனலிஸ்டாக சென்றது யார்? அரங்கமே கண்ணீரில் ஆழ்ந்த தருணம்
எதிர்நீச்சல்
பிரபல டிவி நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இதில் முக்கிய கதாபாத்திரமாக இருப்பவர் தான் குணசேகரன் ஆனால் தற்போது குணசேகரன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் குறைந்து வருகின்றது.
கடந்த எபிசோட்டில் கலெக்டரை பார்ப்பதற்காக ஜனனி அவரின் வீட்டிற்கு சென்று அவரை பார்த்து பேசுகிறார். அப்போது, ஜனனியை கொல்ல வந்த நபர் வந்து பேசுகிறார்.

அவரை பார்த்த ஜனனி, நேற்று ஏன் நீங்க சாப்பிடாமல் போனீங்க என கேட்கிறாள், அப்போது அந்த ரவுடி, அக்கா நான் சாப்பிட வரவில்லை, உங்களை கொல்வதற்காகத்தான் வந்தேன்.
ஆனால், நீங்கள் என்னிடம் அன்பாக பேசியதைப்பார்த்து என் மனம் மாறிவிட்டது. எனக்கு அம்மா, தங்கை இருக்கிறார்கள் அவர்கள் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்.
உங்களை கொலை செய்ய செய்தால் பணம் தருவதாக சொன்னாங்க அதற்காகத்தான் நான் உங்களை கொல்வதற்காக வந்தேன். ஆனால், என்னால் முடியவில்லை அக்கா என்கிறார். பின்னர் ஜனனியும் அது குணசேகரன் தான் என போட்டோ காட்டி முயற்ச்சி செய்கிறார்.

குணசேகரன் கதாபாத்திரம்
இந்த நிலையில் ஜனனி, கிளம்புவதாக சொல்ல கலெக்டர் நான் உங்களை காரில் டிராப் பண்ணுகிறேன் என சொல்லி இருவரும் ஒன்றாக வெளியே வருகின்றனர்.
அப்போது கலக்டர் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதோ பிரச்சனையால் கலக்டரை பார்க்க வந்த நபரிடம் தேவையில்லாமல் மீண்டும் பிரச்சனை செய்தால் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து பார்க்கும் நேரத்தை கூட குறைத்து விடுவேன் என எச்சரிக்கிறார்.

இதையடுத்து அந்த நபர் சென்று விடுகிறார். இதை பார்த்த ஜனனி, கலெக்டரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறாள்.
மறுபக்கம் குணசேகரன் எந்த விதமான தகவலும் அறிவுக்கரசியிடம் இருந்து வரவில்லையே என குழப்பத்தில் இருக்கிறார். கடந்த சில வாரங்களாக குணசேகரை சீரியலில் பார்க்கவே முடிவில்லை.
எதிர்நீச்சல் சீரியலில் கதைக்கயளத்தில் ஏதோ மாற்றம் நடக்கப்போகிறது. அதுவும் கலக்டரை வைத்து கொண்டு சொல்ல போகன்றார் இயக்குநர். அப்போ இனிமே குணசேகரன் சிரியலில் முக்கியம் இல்லை போல கதைகளம் வேறெங்கோ செல்கிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |