சீரியலுக்கு வருவதற்கு முன் வேறு மாதிரி நடித்த ஆதிகுணசேகரனின் தம்பி... கைகொடுத்த எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலில் கதிராக நடித்து வரும் விபுராமன் சீரியலுக்கு வருவதற்கு முன் நடித்த படங்கள் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.
எதிர்நீச்சல் கதிர்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் படித்த பெண்களை தன் கட்டுக்குள் வைத்து அடிமையைப் போல் நடத்தும் சில ஆண்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த சீரியலில் ஆதிகுணசேகரனின் மூன்றாவது தம்பியாகவும் நந்தினியின் கணவனாகவும் நடித்து வருபவர் தான் ஆதிமுத்து கதிர்வேல் என்கிற விபுராமன்.
எதிர்நீச்சல் சீரியலுக்கு முன்
எதிர்நீச்சல் சீரியலில் கதிராக நடிக்கும் விபுராமனின் இயற்பெயர் ஜெகதீஷ், ஊட்டியைச் சேர்ந்த இவர் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த போது அநாகரிகம் எனும் ஆபாசப்படத்தில் நடித்தார்.
அதன் பின் தான் உதயநிதி மற்றும் சந்தானம் இணைந்து நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அடிமேளம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் போக அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அழகு, கல்யாணப் பரிசு, பைரவி, விதி, திகில் போன்ற சீரியல்களில் நடித்தார். பல சீரியல்களில் நடித்தும் பிரபலமாகாத இவர் எதிர்நீச்சல் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.
மேலும், இந்த சீரியலில் இவரின் நடிப்பு கொஞ்சம் மிரட்டலான பாணியில் இருப்பதால் பலருக்கும் இவரைப் பிடித்துப் போனது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |