Ethirneechal: சுற்றி வளைத்த பொலிஸ்! கொத்தாக சிக்கிய கதிர்
எதிர்நீச்சல் சீரியலில் சித்தார்த்திற்கு திருமணம் ஏற்பாடு செய்திருந்த கதிர் கூட்டத்தை பொலிசார் சுற்றி வளைத்துள்ளனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.
பொலிசாரிடம் சிக்கிய கதிர்
நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.
ஜனனி சித்தார்த்திற்கும், தனது தங்கைக்கும் திருமணம் செய்து வைக்க குணசேகரனை முட்டாளாக்கிவிட்டு வீட்டைவிட்டு சென்றுள்ளனர்.
ஆனால் தற்போது பொலிசாரிடம் வசமாக சிக்கியுள்ளனர். இனி ஜனனியின் தங்கைக்கும், சித்தார்த்திற்கும் திருமணம் எவ்வாறு நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
எப்பொழுதும் போல குணசேகரன் தான் வெற்றி பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |