நெத்திலி கருவாடு தொக்கு இதை போட்டு செய்து பாருங்க! சுவை அட்டகாசம்
நெத்திலி கருவாட்டில் ஊரே மணக்கும் தொககு எப்படி செய்யலாம் எனப்பதை பார்க்கலாம்.

நெத்திலி கருவாடு தொக்கு
நெத்திலி கருவாட்டில் என்பது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு உலர் மீன் வகையாகும்.
இதில் உயர் தர புரதங்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு நல்ல ஆற்றலைத் தருவதோடு, இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.
இதில் பல வித ரெசிபிகள் செய்யலாம் ஆனால் தொககு செய்வது அதுவும் காரசாரமாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- நெத்திலி கருவாடு,
- புளி,
- பெரிய வெங்காயம்,
- தக்காளி,
- வெள்ளை பூண்டு,
- எண்ணெய்,
- கடுகு,
- வெந்தயம்,
- மஞ்சள் தூள்,
- கரம் மசாலா,
- மிளகாய் தூள்,
- உப்பு.

செய்முறை
தொக்கு செய்ய முதலில் அதிலுள்ள உப்பை நீக்க அதை சுடுதண்ணீரில் நன்றாக ஜந்து நிமிடத்திற்கு மேல் ஊற வைத்து கழுவி எடுக்க வேண்டும்.
பின்னர் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து அதில் சமையல் எண்ணெய் ஊற்றி சூடாக விடவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு வெடித்ததும், வெந்தயம் மற்றும் வெள்ளை பூண்டினை சேர்த்து இடித்துக்கொண்டு இதில் சேர்த்து பச்சை வாசம் தீரும் வரை நன்றாக வதக்கி கொள்ளவும்.
பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து மஞ்சள்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்புவையும் சேர்த்து வதக்கி கொண்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடம் வரை கொதிக்கவிடவும்.
கொதித்த பின் சிறிய அளவில் புளி எடுத்து புளி கரைசலை ஊற்றி கருவேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் சுடுதண்ணீர் ஊறவைத்த கருவாட்டினை எடுத்து கொதிப்பதில் சேர்த்து 10 முதல் 15 நிமிடம் வரை கொதிக்க விட்டு எடுத்தால் தொக்கு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |