குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள்
குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது இல்லை. இதற்கு பதிலாக உடம்பிற்கு கெடுதல் ஏற்படுத்தும் ஜங்க் ஃபுட் வகைகளைத் தான் அதிகமாக சாப்பிட ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் குழந்தைகளுக்கு 2 வயது தாண்டிவிட்டாலே நாம் ஆரோக்கியமான உணவினை கட்டாயம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் ஆரோக்கியமான உணவு என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவுகள்
குழந்தைகளுக்கு பருப்பு உணவுகளை தினமும் கொடுப்பது அவசியமாகும். ஏனெனில் குழந்தையின் உடலில் புரத சத்தின் அளவு சரியாக இருப்பதற்கு பாசிப் பருப்பு சிறந்த தெரிவாகும்.
ஆளிவிதை, அக்ரூட், சோயா பீன்ஸ் மற்றும் பிற நட்ஸ் வகைகள் உடம்பிற்கு தேவையான கொழுப்பு அமிலங்களை வழங்குகின்றது. ஆதலால் இந்த எண்ணெய்களை எடுத்துக் கொள்வது ஆரோக்கியம் ஆகும்.
பால், தயிர், பன்னீர் போன்ற கால்சியம் நிறைந்த பால் பொருட்களை எடுத்துக் கொள்வது அவசியமாகும். அதுவே லாக்டோஸ் ஒவ்வாமை குழந்தைகள் என்றால் கால்சியம் சப்ளிமெண்ட் வழங்கலாம்.
மெக்னீசியம், பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழத்தினை குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். இவை இதய ஆரோக்கியத்திற்கும், தசை வலிமைக்கும் உதவுகின்றது.
வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்த கேரட் மற்றும் கீரையை உணவில் கட்டாயம் சேர்க்கவும். ஏனெனில் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றது.
இரும்புச்சத்து சரியாக இருந்தால் தான் ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருக்கும். ஆதலால் அசைவ உணவினை கட்டாயம் எடுத்துக் கொள்ளவும்.
வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கின்றது.
அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை வழங்குவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும் மீனை குழந்தைகள் உணவில் கட்டாயம் சேர்க்கவும்.
மேலும் வைட்டமின் டி சத்துக்கள் குழந்தைகளின் எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கின்றது. ஆதலால் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் இந்த சத்தை தவறாமல் பெற்றுக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |