ஒரே கட்டில் மூட்டுவலியை இடம் தெரியாமல் போக்கும் மருத்துவம்! நீங்களும் செய்யலாம்
பொதுவாக பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் சுமார் 40 வயதை தாண்டும்போது மூட்டுவலி ஏற்படலாம்.
இது போன்ற பிரச்சினைகளுக்கு காரணம் வயது அதிகரிக்க அதிகரிக்க எலும்புகள் வலுவிழந்து போவதே.
மூட்டுவலி என்பது மேற்தோள் பட்டை, கை மூட்டு, கை மணிக்கட்டு, கால் மூட்டு, இடுப்பு மூட்டு போன்ற இடங்களில் ஏற்படும் அசௌகரிய உணர்வு, வலி, சோர்வு மற்றும் வீக்கம் போன்ற உணர்ச்சிகளை குறிக்கிறது.
இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும் போது சிலர் எலும்பியல் வைத்தியர்களை நாடி மருத்துவம் பெறுவார்கள். இன்னும் சிலர் வீட்டு வைத்தியம் முறையை கையாள்வார்கள்.
இந்த வைத்திய முறையை கையாளும் போது நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்ள முடியும். அந்தவகையில் மூட்டு வலிகளை விரட்டியடிக்கும் வீட்டு வைத்தியம் முறையொன்று எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
மூட்டு வலியால் ஏற்படும் பிரச்சினைகள்
- மூட்டு வலி தொடரும் போது உடலிலுள்ளே இருக்கும் உள்பகுதி பாதிப்படையும்.
- ஆர்த்ரைட்டிஸ் (arthritis) என்கிற மூட்டு வீக்கம்
- முடக்குவாதம்
- எலும்பில் தொற்றுப்பாதிப்பு ஏற்பட்டிருப்பது
- எலும்புப்புரை (Osteoporosis)
- எலும்பு நோய் (rickets)
- எலும்பைச் சுற்றியுள்ள இணைப்புப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவது
- 'ஹெபடைட்டிஸ்' போன்ற தொற்றுநோய்
பிரச்சினைகள் எளிய முறையில் சரிச்செய்யும் மருத்துவம்
தேவையானப் பொருட்கள்
மஞ்சள் - 1 மேசைக்கரண்டி
கற்றாழை ஜெல் - 1 மேசைக்கரண்டி
கடுகு எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
எருக்கன் செடி - 2 இலை
தயாரிப்புமுறை
முதலில் ஒரு பவுலில் மஞ்சள், கற்றாழை ஜெல், மற்றும் கடுகு எண்ணெய் ஆகிய மூன்றையும் நன்றாக கலந்துக் கொண்ட பின்னர் எருக்கன் செடியிலிருக்கும் 2 இலைகள் எடுத்து அதில் எண்ணெய் தடவி நன்றாக ஒரு கடாயில் மேல் வைத்து இளம் சூட்டில் வெப்பமேற்றிக் கொள்ள வேண்டும்.
பாவணைமுறை
மூட்டு வலி உள்ள பகுதியை நன்றாக கழுவி கொள்ள வேண்டும். மஞ்சள் கலவையை அந்த பகுதியில் தடவி மஜாஜ் செய்ய வேண்டும். பின்னர் அந்த இடத்தில் மேல் இலையை வைத்து துணி அல்லது பேண்டேஜில் இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும்.