கண் பார்வையை அதிகரிக்கும் இறால் புளிக்குழம்பு! பத்தே நிமிடத்தில் செய்வது எப்படி?
மீனை போல் இறாலும் பலருக்கு பிடித்த கடல் உணவு.
மீன் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம். அதே போல இறால் சாப்பிட்டாலும் கண் நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். இறால்களில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளது.
அவை மாஸ்குலர் டீ-ஜெனரேஷன் எனப்படும் கண் பார்வை சிதைவிலிருந்து எம்மை காக்கும்.
கண்ணுக்கு மருந்தாகும் இறால்
இதிலுள்ள அஸ்டக்ஸாந்தின் கண் வலிக்கு பெரிய நிவாரணியாக உள்ளது.
முக்கியமாக கணினி திரை முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு நல்ல நிவாரணியாக இருக்கும். எனவே இறாலை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இறாலில் பல உணவுகளை செய்து ருசிக்கலாம்.
இன்று இறால் புளிக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- இறால் - கால் கிலோ
- தக்காளி - 2
- பெ.வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 3
- இஞ்சி பூண்டு விழுது -சிறிதளவு
- மிளகாய் தூள் – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- கொத்தமல்லித் தூள் – 2 டேபிள்ஸ்பூன்
- புளி – சிறிதளவு
- கடுகு, உளுந்தம் பருப்பு – சிறிதளவு
- கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – சிறிதளவு
- உப்பு, எண்ணெய் – தேவைக்கு
செய்முறை
இறால் புளிக்குழம்பு செய்ய தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
புளியை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து கரைத்து எடுக்கவும்.
பிறகு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளியுங்கள்.
பின்னர் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்குங்கள்.
நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள் போட்டு கிளறுங்கள்.
பின்னர் புளிகரைசலை ஊற்றி கிளறிவிடுங்கள். அடுத்து இறால் துண்டுகளை போட்டு சிறிதளவு தண்ணீர், போதுமான அளவு உப்பு சேர்த்து கலக்கிவிட்டு மூடி வையுங்கள்.
அடுப்பை மிதமான சூட்டில் வைத்துவிட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைத்து இறக்குங்கள்.