குழந்தையின் மூக்கிலிருந்து திடீரென இரத்தம் வடிய இது தான் காரணமாம்! இனி கவலை வேண்டாம்
பொதுவாக குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென மூக்கிலிருந்து இரத்தம் வழிய ஆரம்பிக்கும், அதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் தாய்மார்கள் பயந்து விடுவார்கள்.
ஆனால் ஒருவருடைய மூக்கிலிருந்து இரத்தம் இயல்பாக கசியாது. நாம் எதாவது செய்திருக்க வேண்டும் அல்லது ஏதாவது நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
ஆனால் இது குறித்து ஆராய்ந்து முடிவு எடுப்பதால் பெற்றோர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலும் குறையும். அந்தவகையில் அதனை எவ்வாறு கண்டு பிடிப்பது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
இரத்தம் வருவதற்கான காரணங்கள்
1. பொதுவாக குழந்தைகள் விளையாடும் போது மூக்கில் பலத்த அடிபட்டால் இரத்தம் வரும்.
2. 'எபிஸ்டேக்சிஸ்' என்ற நோயின் தாக்கம் இருந்தால், அதன் அறிகுறியாக இரத்தம் வழிய ஆரம்பிக்கும்.
3. மூக்கை வெளியிலிருந்து பார்ப்பதற்கு பெரிதாகவும் சற்று உறுதியாக இருப்பது போன்றும் இருக்கும். ஆனால் அது ஒரு ஏர்கன்டிஷனர் மாதிரி செயற்பட வேண்டும் இதனை பலமாக அழுத்தும் வகையிலோ அல்லது அடிப்படும் வகையில் விளையாடினாலும் இரத்தம் வரும்.
4. 'லிட்டில்ஸ் ஏரியா' எனும் பெயரால் கொண்டு அழைக்கப்படும் நுண்ணிய இரத்தக் குழாய்கள் மூக்கில் இருக்கும் இது லேசாக தீண்டப்பட்டாலும் இரத்தம் கசிய ஆரம்பித்து விடும்.
5. கையை மூக்கில் வைத்து விளையாடுவார்கள் இதன்போதும் கையிலிருக்கும் நகம் குற்றினாலும் இரத்தம் வெளியேறும்.
6. நாம் படிக்கும் போது பயன்படுத்தும் குச்சி, பேனா, பென்சில் போன்ற கூர்மையான பொருட்களை வைத்து தீண்டினாலும் இரத்தம் கசிய ஆரம்பிக்கும்.
7. குழந்தைகளுக்கு ஒவ்வாமை அல்லது சளி பிரச்சினை அதிகரிக்கும் போது இரத்தம் வழிய ஆரம்பிக்கும்.
8.குழந்தைகளுக்கு மூக்கில் 'நீர்க்கோப்பு சதை' எனப்படும் இணைப்பு சதை வளரும். இது வீங்கும் இவ்வாறு வீங்கும் பொழுது குழந்தைகளுக்கு அரிப்பு உண்டாகும். இதனை தாங்க முடியாமல் குழந்தைகள் அதனை தீண்டுவார்கள். இதனால் இரத்த கசிவு ஏற்படும்.
முக்கிய குறிப்பு
மேற்குறிப்பிட்ட காரணங்கள் இல்லாவிடின் ஏதாவது நோயின் அறிகுறியாக இருக்கலாம்.