இயற்கையோடு இணைந்து பயணிப்போம்.. மாசற்ற உலகின் ரகசியம் என்ன?
சூழலின் ஆதிக்கத்திற்கு மனிதன் இணைந்து வாழ்ந்த காலம் போய் இன்று தனக்கேற்ற வகையில் சூழலை வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றான்.
ஆனால் அதற்காக பதிலடியை இயற்கையும் அவ்வப்போது கொடுத்து கொண்டு தான் இருக்கின்றது என்றால் மிகையாகாது. ஆம் இயற்கை எமக்கு கிடைத்துள்ள மிக பெரும் கொடையாகும்.
பூமியில் மானிட நிலைப்பிற்கான நவீன சாதனங்களின் வருகையாலும், உலகமயமாக்கலினாலும், சனத்தொகை அதிகரிப்பினாலும் தற்போது சூழல் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகுகிறது.
உலகம் அழியும் என சமய ரீதியான கருத்துக்கள் இருப்பினும் உலகம் மனித நடவடிக்கைகளால் அளிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. தற்போது சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், விஞ்ஞான ஆய்வுகள், தொழிற்சாலைகளின் கழிவுகள், காடழிப்பு, புவி வெப்பமடைதல் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
இதன் அவசியம் குறித்து மக்கள் மத்தியில் இன்னும் போதிய விழிப்புணர்வு அற்ற நிலையே நிலவுகின்றது. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு இரசாயண பொருட்களினாலும் சூழல் மாசடைக்கிறது.
இது மனித குலத்திற்கு மனிதர்களே ஏற்படுத்திக் கொண்ட தீங்கு
நாம் விவசாயத்திற்கு பயன்படுத்தும் கிருமிநாசினிகள், உர வகைகள், மருந்து பொருட்கள், வீடுகளுக்கு பயன்படுத்தும் நிற பூச்சுக்கள், நாம் பயன்படுத்தும் அழகுசாதன பொருட்கள், வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் புகை மற்றும் கழிவுகள் போன்ற அனைத்தும் சூழலுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
இது குறித்து மக்கள் மற்றும் அரசுகள் விழிப்புணர்வற்றவர்களாக இருக்கின்றனர். உலக மயமாக்கள் எனும் பெயரிலும் நாடுகளுக்கிடையிலான போட்டி காரணமாகவும் சூழல் பற்றிய அக்கறையின்றி செயற்பட ஆரம்பித்துவிட்டோம். இது மனித குலத்திற்கு மனிதர்களே ஏற்படுத்திக் கொண்ட தீங்கு.
இதனால் பலவிதமான அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதிற்கொள்ள வேண்டும். ஏனெனில் இதனால் பாதிப்புக்குள்ளாக போவது முழு உலகமும் தான்.
வல்லரசாக வேண்டும் என்ற வேகத்தில் உள்ள நாடுகளும், தமது நிலையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் செயற்படும் நாடுகளும் பலவிதமான அணுவாயுத பரிசோதனைகளையும், புதுப்புது கண்டுப்பிடிப்புக்களையும் மேற்கொண்ட வண்ணமே இருக்கின்றன.
ஆனால் இதன் மூலம் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை ஈடு செய்வது குறித்தோ சூழலை பாதுகாப்பது குறித்தோ எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மேலும் காடுகளை அழித்து பல்வேறு உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றோம். வீடுகளை அமைப்பதற்கும்,தொழிற்சாலைகளை அமைப்பதற்கும் என எவ்வளவோ காடுகள் அளிக்கப்பட்டு விட்டன.
மனிதன் சுவாசிக்கும் ஒட்சிசனை தாவரங்கள் வெளிவிடுகின்றன நாம் வெளிவிடும் காபனீரொட்சைட்டை தாவரங்கள் சுவாசிக்கின்றன இங்கு மனிதன் வாழ வேண்டுமானால் தாவரங்களும் வாழ வேண்டியது அவசியம். மனிதன் காடுகளை அழிப்பது அவனது நுரையீரலின் பாதியை வெட்டுவதற்கு சமமாகும்.
உண்மையில் பாதி சுவாசம் எம்மிடமும் மீதி சுவாசம் தாவரங்களிடமும் தான் இருக்கிறது என்பதை ஒவ்வொரு மனிதனும் புரிந்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி காடுகள் அழிக்கப்படுவதானால் மண்சரிவு, வரட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களும் ஏற்படுகின்றன.
மேலும் தொழிற்சாலை கழிவுகள் காரணமாக வளி மற்றும் நீர் மாசடைக்கிறது. மற்றும் வெப்ப வாயுக்களின் பாவனை அதிகரிப்பின் காரணமாக ஓசோன் படை பாதிப்புக்குள்ளாகிறது. இதனால் புவி வெப்பமடைக்கிறது.
புவி வெப்பமடைதல் காரணமாக துருவ பிரதேசதில் காணப்படும் பனிப்பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் உயர்வடைக்கிறது இதனால் கடற்கரை அரிப்புக்குள்ளாவதுடன் சிறு தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படுகிறது.
மேலும் வெப்ப வாயுக்களின் அதிகாரிப்பினாலும், தொழிற்சாலை கழிவுகள் வெளியேற்றப்படுவதினாலும் வளிமண்டலம் மாசடைந்து அமிலமழை பெய்தல் போன்ற இயற்கை அனர்த்தங்களும், புற்று நோய், பல்வேறு சர்ம நோய்களும் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.
நாம் சூழலின் மீது அக்கறையின்றி செய்யும் ஒவ்வொரு செய்ற்பாடும் நம்மையே அழிக்கும் கருவியாக மாறிவிடும் என்பதை நாம் உணர வேண்டும். நாம் சூழலுக்கு செய்யும் தீங்கு தாயின் கருவறையில் இருந்துக்கொண்டு தாயின் வயிற்றை கத்தியால் குத்துவதற்கு ஒப்பானது.
இதனால் அழியப்போவது தாய் மட்டுமல்ல நாமும் தான் என்பதை மறந்துவிடகூடாது. எம்மால் இயன்றவரை சூழலுக்கு இயைந்து வாழ பழக வேண்டும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் ஒருபோதும் இயற்கை மனிதனின் ஆதிக்கத்திற்கும், அதிகாரத்திற்கும் அடிப்பணியாது.
இயற்கையை தன் கட்டுக்குள் வைத்திருப்பதாக எந்த தனி மனிதனோ அல்லது அரசோ நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறேதும் இல்லை. நாம் சூழலுக்கு செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் தக்க பதிலடியை இயற்கை கொடுத்தே தீரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |