காலில் வில்லைப் பிடித்து குறி பார்த்து அடித்து அசத்திய சிறுவன் - வைரலாகும் வீடியோ
காலில் வில்லைப் பிடித்து குறி பார்த்து அடித்து அசத்திய சிறுவனின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
காலால் குறி பார்த்து அடித்து அசத்திய சிறுவன்
திறமைக்கு எப்போதும் வயது ஒரு தடங்கல் கிடையாது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தத் திறமையை காட்டலாம். ஏதாவது ஒரு துறையில் திறமையை வளர்த்துக் கொண்டால், அத்துறையில் சிறந்து விளங்கலாம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட திறமைகள் கொண்டிருப்பார்கள்.
அவர்களின் திறமைகளை அதிகரிக்க வேண்டுமானால் பல வகுப்புகளுக்கு அனுப்புவதை விட அவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து பயிற்சி கொடுத்தால், அவர்களின் திறமை வளரும்.
சமூகவலைத்தளங்களில் ஏதாவது ஒரு வீடியோ வெளியாகி நம்மை அசத்திவிடும். அதுபோலத்தான், தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பீகாரில் சிறுவன் ஒருவன் தன் காலால் வில்லைப் பிடித்து தலைக்கீழாக சாய்ந்து குறிப் பார்த்து பலூனை உடைத்து அசத்தியுள்ளான்.
No dearth of talent in Bihar , They need right platform and proper grooming.
— Bihar_se_hai (@Bihar_se_hai) June 8, 2023
pic.twitter.com/cUJ4IFULGh