அடடா... என்ன அழகு... சிலந்தி வலை கட்டும் அழகை இதோ பாருங்க
சிலந்திகள் குறைந்தபட்சம் முப்பது கோடி ஆண்டுகளாகக் கூடு கட்டிக் கொண்டிருக்கின்றன. மனித இனம் பத்தாயிரம் ஆண்டுகளாகத்தான் வீடு கட்டுகிறது. பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இல்லாத இடம் என்பதை உணர்த்த, சிலந்தி வலையை ஒதுக்கியவாறே உள்ளே நுழைவதைப் போன்ற காட்சிகளை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம்; நம் வீட்டின் சுவர்களில் படியும் ஒட்டடையை மாதம் ஒருமுறை சுத்தம் செய்கிறோம்.
இத்தனை கோடி ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியின் விளைவால் சிலந்தி வலைகள் பல சுவாரசியப் பண்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. புரதத்தில் இருந்து பட்டுக்களை உருவாக்கும் பட்டுப்பூழுக்களைப் போலவே, சிலந்திகளும் புரதங்களில் இருந்தே வலைகளை உருவாக்குகின்றன. அறிவியல் புலத்தில் சிலந்தி வலை, ‘சிலந்திப்பட்டு’ என்று அழைக்கப்படுகிறது.
தற்போது சமூகவலைத்தளத்தில் சிலந்தியின் வீடியோ ஒன்று வைரலாக வருகிறது. அந்த வீடியோவில் சிலந்தி வலைக் கட்டும் அழகு மெய்சிலிர்க்க வைக்கிறது.