அடேங்கப்பா! இங்க ரூ.1000 அங்க 41000 ரூபாயா! வாயடைத்துப்போன நெட்டிசன்கள்
இந்தியாவில் பயன்படுத்தப்படும் கட்டிலை நியூசிலாந்தை சேர்ந்த நிறுவனம் ரூ.41,000க்கு விற்பனை செய்யும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தரமான பொருட்கள் அனைத்தும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்படிப்பட்ட இந்த தரமான இந்திய பொருட்கள், வெளிநாட்டில் அதிக ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாதிரியான செயல் ஒன்று தற்போது நியூசிலாந்து நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு கயிற்று கட்டில் “இந்தியன் வின்டேஜ் பெட்” என்ற பெயரில் நியூசிலாந்து நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் இதன் மதிப்பு வெறும் ரூ.1000தான். ஆனால், இந்த கட்டில் அந்த நாட்டில் சுமார் 41000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், இதற்கு பெயர் தான் “அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவதாக” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
