கோயில் தூண் மீது சுழலும் கல்.. இப்படியொரு அதிசயமா? விழி பிதுங்கி பார்க்க வைத்த வீடியோ வைரல்!
இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் நாம் பெரிய, பெரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதைப் பார்க்கிறோம். ஆனால், அன்றைய காலத்திலேயே நம் முன்னோர்கள் பெரிய அதிசயங்களைச் செய்திருக்கிறார்கள்.
அந்த வரிசையில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இந்து கோயில்களைச் சுற்றி ஏராளமான அதிசயங்கள் உள்ளன. அதுபோல், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் பாதாள அறையைத் திறந்த போது கட்டுக், கட்டாக இருந்த தங்கமும், வைரமும் இதற்குச் சாட்சி. இதேபோல் பல கோயில்களிலும் விக்கிரகங்கள் தொடங்கி பலவற்றிலும் பல ஆச்சர்யங்கள் உள்ளன.
அந்த வகையில் இப்போது பெங்களூர் ரங்கநாத சுவாமி கோயிலில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. அங்கிருக்கும் கல்தூணில் சுழலும் கல் சக்கரம் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது இது தொடர்பான வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இந்த சிற்பி கல்பேரிங் கண்டுபிடிச்ச விஞ்ஞானியா இருந்துருக்காரே என்று பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது, இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு ரங்கநாத சுவாமி கோயிலில் கல் தூண் மீது சுழலும் கல் சக்கரம்
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) August 18, 2021
# அந்த காலத்தில் கல் பேரிங் கண்டுபிடிச்ச விஞ்ஞானி...??? pic.twitter.com/TPq100NXAZ