புதிய வண்டி வாங்கிய குக் வித் கோமாளி பிரபலம் - யாருன்னு தெரியுமா? அட இவரா...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடையே பெரிய ஆதரவை பெற்ற நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. குக் வித் கோமாளியில் முதல் சீசனை விட 2ம் சீசனுக்கு தான நல்ல வரவேற்பு கிடைத்தது.
2ம் சீசன் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. குக் வித் கோமாளி சீசன் 2வின் டைட்டில் வின்னராக இயக்குனர் திருவின் மனைவி, கனி வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் ரசிகர்கள் மத்தியில் கோமாளியாக பிரபலமானவர்தான் சக்தி. இவர் இதற்கு முன் Youtube மற்றும் டிக் டாக் மூலம் பிரபலமானவர்.
ஆனால், தற்போது குக் வித் கோமாளி மூலம் பல ரசிகர்கள் பெற்றுள்ளார். இந்நிலையில், குக் வித் கோமாளி சக்தி, புதிதாக பைக் ஒன்று வாங்கி இருக்கிறார். அந்த பைக்கின் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்.
இந்த பதிவிற்கு கீழ், KPY பாலா, புகழ், ரக்ஷன், ரித்திகா, மற்றும் பல குக் வித் கோமாளி பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
