விஜய் சேதுபதிக்கு பிடித்த எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு- எப்படி செய்யணும்?
நடிகர் விஜய் சேதுபதி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவருக்கு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பிடிக்கும் என கூறினார்.
அந்த வகையில் விஜய் சேதுபதிக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடித்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு எப்படி வைப்பது என தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கத்தரிக்காய் - ½ கிலோ
- எண்ணெய் - 5 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- சின்ன வெங்காயம் - ஒரு கையளவு
- நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
- நறுக்கிய தக்காளி - 1
- பூண்டு - ஒரு கைப்பிடி
- பூண்டு - 10 பல்
- கடுகு - ¼ ஸ்பூன்
- வெந்தயம் - ¼ ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
- புளி சிறிய நெல்லிக்காய் அளவு
- பெருங்காயம் - 2 சிட்டிகை
- தேங்காய் - 3 துண்டுகள்
எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு
முதலில் கத்தரிக்காயை நன்றாக சுத்தம் செய்து விட்டு கீறி வைத்து கொள்ளவும்.
பின்னர், ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் சேர்க்கவும். அதில் கத்தரிக்காயை போட்டு நன்றாக வதங்க விடவும். கடாயில் இருக்கும் கத்தரிக்காய் முக்கால் வாசி வெந்தவுடன் தனியே எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பூண்டு,தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதங்க விடவும். வாசனை வரும் போது தேங்காய் பூ போட்டு வதக்கவும்.
வதங்கிய பின்னர் அந்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும். குழம்பிற்கு இந்த விழுது அவசியம். எனவே சரியாக படிமுறைகளை செய்யவும்.
தொடர்ந்து, கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், 4 பல் பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அடுப்பை குறைத்து விட்டு பெருங்காயத்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின், அதில் சீரகம் மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
பின்னர் அரைத்து வைத்திருக்கும் மசாலா போட்டு 3 நிமிடம் வரை மசாலா பொருட்களை வதங்க விடவும். வதங்கி கொண்டிருக்கும் போது 2 சிறிய துண்டு வெள்ளம் சேர்க்கவும்.
குழம்பு கொதித்து கொண்டிருக்கையில், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான வெப்பநிலையில் மூடி வைக்கவும்.
இறுதியாக கத்தரிக்காய் தனியாகவும் எண்ணெய் தனியாகவும் பிரிந்து வந்திருந்தால் அது தான் சரியான பதம். அத்தோடு அடுப்பை அணைத்து சூடான சாதத்துடன் பரிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |