சிவப்பு பட்டியலில் இல்லாத நாடுகளிலிருந்து வருவோருக்கு சிறப்பு சலுகையை அறிவித்த இங்கிலாந்து!
இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு அரசு தளர்த்தி இருந்தாலும், இங்கிலாந்து அரசு இதுவரை தளர்த்தாமல் இருக்கிறது. இங்கிலாந்து அரசு ஆனது, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கடந்த மாதத்தில் தளர்த்தி இருந்தது,.
ஆனாலும், இந்தியாவில் இருந்து வரும், கட்டுப்பாடுகளை மட்டும் இதுவரை தளர்த்தாமல் இருப்பதால், இரு நாடுகளுடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இதனிடையே, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அரசு இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்பின், கடந்த 11-ம் திகதியில், இங்கிலாந்து அரசு இந்திய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்தது. 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட இந்திய பயணிகள் 10 நாட்கள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தது.
இதனால், இந்திய அரசும் இங்கிலாந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இந்நிலையில், சிவப்பு பட்டியல் அல்லாத நாட்டு பயணிகளுக்கு இங்கிலாந்து அரசு புதிய சலுகை அளித்துள்ளது.
அதில், சிவப்பு பட்டியல் அல்லாத நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகள் பிசிஆர் டெஸ்டுக்குப் பதிலாக எல்.எப்.டி. (பக்கவாட்டு ஓட்டப் பரிசோதனை) சோதனையை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
மேலும், பி.சி.ஆர். சோதனைகளை விட எல்.எப்.டி. சோதனை மலிவானவை மற்றும் விரைவானவை. சோதனையின் முடிவு நெகடிவ் என்றால் பயணிகள் அதை உடனே புகைப்படம் எடுத்து அனுப்பலாம் எனவும் தெரிவித்துள்ளது.