காலையில் வெறும் வயிற்றில் டீ, காபி குடிக்கலாமா? இந்த பிரச்சினை உள்ளவர்கள் தொடவே வேண்டாம்
காலை வெறும் வயிற்றில் டீ மற்றும் காபி குடிப்பது ஆபத்தா? என்ற கேள்விக்கு இங்கே பதில் தெரிந்து கொள்வோம்.
வெறும் வயிற்றில் டீ, காபி
பொதுவாக, வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பது நல்லதல்ல என்று தான் கூறப்படுகிறது. டீ மற்றும் காபியில் காஃபின் உள்ளது, இது வயிற்று அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கக்கூடும்.
இதனால் வயிறு எரிச்சல், நெஞ்செரிச்சல், குமட்டல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதுடன், காஃபின் சிறுநீரை அதிகரிப்படுத்துவதால் நீரிழப்பும் ஏற்படும்.
ஒரு சிலருக்கு வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதால் தலைவலி, தூக்கமின்மை, பதட்டம் பிரச்சினைகளும் ஏற்படலாம்.
ஆகவே கலை வெறும்வயிற்றில் டீ, காபி குடிப்பதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. இதுவே உணவுடனோ அல்லது உணவிற்கு பின்போ நீங்கள் டீ, காபி குடித்தால் இந்த பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவே.
வெறும் வயிற்றில் எக்காரணத்தை கொண்டும் டீ, காபி குடிக்கக்கூடாதவர்கள் யார் என்பதை கீழே தெரிந்து கொள்ளலாம்.
- வயிற்றுப் புண் உள்ளவர்கள்
- இரைப்பை அழற்சி நோய் உள்ளவர்கள்
- பதட்டம் அல்லது மன அழுத்தம் உள்ளவர்கள்
- தூக்கப் பிரச்சனைகள் உள்ளவர்கள்
இருப்பினும், சிலருக்கு வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. அப்படிப்பட்டவர்கள் தங்கள் உடல்நிலைக்கு ஏற்றவாறு முடிவு எடுக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |