வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பவரா நீங்கள்? இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கே
இன்று உலகம் முழுவதும் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு பானம் கிரீன் டீ ஆகும்.
கிரீன் டீ
இன்றைய கால கட்டத்தில், எடை குறைப்பு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், உடலின் இயல்பான வெப்பநிலையை சீராக்குவது போன்ற அற்புதமான பண்புகள் கொண்டுள்ள கிரீன் டீ மிகவும் பிரபலமானது.
ஆரோக்கியமான நடைமுறைகளைப் பின்பற்றும் ஒருவராக நிச்சயமாக கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்கம் கிரீன் டீ குடிப்பது என்ற நிலை உள்ளது.
ஆனால், இந்த அனைத்து ஆரோக்கிய நன்மைகளை பெற சரியான முறையில், சரியான நேரத்தில் குடிக்க வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட நேரத்தை விட கிரீன் டீயை மற்ற நேரம் உட்கொண்டால், வயிற்று எரிச்சல், பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அதன்படி, கிரீன் டீயைக் குடிப்பதற்கு எது சரியான நேரம், எந்த அளவில் அதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கிரீன் டீ எப்போது குடிக்க வேண்டும்?
கிரீன் டீ உடலுக்கு பல நன்மைகலை அளிக்கும் என்றாலும், அதனை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
காலையில் அதை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது என்கின்றனர் நிபுணர்கள். காலையில் கிரீன் டீ குடிப்பது வயிற்றின் சமநிலையை பாதிக்கும்.
ஏனெனில், கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வலுவான பாலிபினால்கள் நிறைந்துள்ளன. இது வயிற்று அமில உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வெறும் வயிற்றில் குடிப்பதால் நெஞ்செரிச்சல், வயிற்றில் அமிலச் சுரப்பு, செரிமானப் பிரச்னை, வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
மேலும், இது வயிற்றுப்போக்கு அபாயத்தையும் ஏற்படுத்துகிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கிரீன் டீயை உணவுக்கு இடையில் அல்லது உணவு உண்ட பிறகு எடுத்துக் கொண்டால் மட்டுமே ஆரோக்கிய பலன்களை அடையலாம்.
