வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாமா? பலரும் அறியாத உண்மை
இன்று உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி மேற்கொள்வதை பெரும்பாலான நபர்கள் விரும்புகின்றனர்.
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி
உடல் எடை அதிகரித்து சிரமப்படும் நபர்கள் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து வருவதை நாம் அவதானிக்க முடிகின்றது. உடற்பயிற்சி என்பது அதிகாலை நேரத்தில் செய்ய வேண்டும் மட்டுமின்றி, வெறும் வயிற்றில் செய்தால் அதிக பலன்களை அடையலாம் என்று கூறப்படுகின்றது.
ஆனால் அதே நேரத்தில் கடுமையான உடற்பயிற்சியினை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றால் அனுபவம் வாய்ந்த நபர்களை அருகில் கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டுமாம்.
கிடைக்கும் நன்மை
வெறும் வயிற்றில் கடுமையான உடற்பயிற்சி செய்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய வாய்ப்பு இருப்பதாகவும் எனவே வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி ஜாக்கிங் போன்ற எளிமையான உடற்பயிற்சியை மட்டுமே செய்ய வேண்டும்.
உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு குறைந்த அளவு சாப்பாடு எடுத்துக்கொள்ளலாம். மேலும் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவாக இருக்க வேண்டுமாம்.
உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு பழங்கள், தானியங்கள், முட்டை, கோதுமை, பால் சாப்பிடலாம் என்றும் உடற்பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.