வெறும் வயிற்றில் வெள்ளை பூசணி ஜுஸ் குடித்து பாருங்க! அசால்டாக எடையை குறைச்சிடலாம்
தினமும் வெறும் வயிற்றில் வெள்ளை பூசணி ஜுஸ் குடித்து வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மையைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
வெள்ளை பூசணி
கோடை காலத்தில் அதிகமாக காணப்படும் காய்கறிகளில் ஒன்று தான் வெள்ளை பூசணி. இதனை சாம்பல் பூசணி என்றும் அழைக்கப்படுகின்றது.
இதில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக காணப்படுகின்றன.
வெள்ளை பூசணியை வைத்து பொரியல், சாம்பார் என சமையல் செய்து சாப்பிடுகின்றோம். இந்நிலையில் வெள்ளை பூசணி ஜுஸ் உடம்பிற்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
நன்மைகள் என்ன?
வெள்ளை பூசணியை வெறும்வயிற்றில் ஜுஸாக குடித்து வந்தால், இதிலுள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் உடம்பிலுள்ள நச்சுக்கள் வெளியேறுவதுடன், செரிமானத்தையும் மேம்படுத்துகின்றது. எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை தாராளமாக பருகலாம். கடுமையான நோய்களிலிருந்தும் பாதுகாப்பாக இருக்கலாம்.
வெள்ளை பூசணியில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துவதுடன், குடலில் நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கின்றது. மேலும் வயிறு தொடர்பான பிரச்சனை வராமல் தடுக்கின்றது. மலச்சிக்கல், அஜீரணம், வாயு மற்றும் அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
உடம்பை நீரேற்றமாக வைத்திருப்பதற்கு வெள்ளை பூசணி ஜுஸ் உதவுகின்றது. ஏனெனில் இதில் அதிகமான நீர்ச்சத்து இருப்பதுடன், நீரிழப்பு பிரச்சனையையும் தடுக்கின்றது. கோடை காலத்தில் உடம்பை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும்.
வெள்ளை பூசணியில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆக்சிஜனேற்றிகள் ஏராளமாக உள்ளதால், உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. பல தொற்று நோய்களிலிருந்தும் பாதுகாப்பாக இருக்கலாம்.
ஆனால் உடல்நல பிரச்சனை உள்ளவர்கள் காலை வெறும் வயிற்றில் வெள்ளை பூசணி ஜுஸை பருகும் முன்பு மருத்துவ ஆலோசனையை பெற்றுக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
