வெறும் வயிற்றில் சியா சீட்ஸ் தண்ணீரை ஏன் குடிக்க வேண்டும்?
ஆரோக்கியமாகவும், உடம்பினை கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்வதற்கு சத்துக்கள் நிறைந்த உணவினை சேர்க்க வேண்டும்.
ஆம் நாம் புதிதாக தொடங்கும் நாளில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை முன்கூட்டியே கவனித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு எடுக்கும் உணவுகள் ஆரோக்கியமாகவும் சத்துக்கள் நிறைந்தும் இருக்க வேண்டும். இதற்கு சியா சீட்ஸ் மிக அருமையாக உதவி செய்கின்றது.
சத்துக்களை அள்ளித்தரும் சியா விதை தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏற்படும் நன்மையை தெரிந்து கொள்வோம்.
வெறும் வயிற்றில் சியா விதை தண்ணீர்
வெறும் வயிற்றில் சியா விதை தண்ணீரை பருகினால் எடை நிச்சயம் குறையுமாம். ஏனெனில் இதில் 39 சதவீதம் நார்ச்சத்து இருப்பதால், பசியை குறைத்து உதவி செய்கின்றது.
செரிமானத்தை நன்றாக ஊக்குவித்ததுடன், அதிகரித்த வளர்சிதை மாற்றத்தை சீராக்குவதுடன், இதய ஆரோக்கியத்தையும் காத்துக் கொள்கின்றது.
உயர் ரத்த அழுத்தம், இதய ஆரோக்கியத்தை அளிக்கின்றது..
வீக்கத்தை குறைக்க உதவுவதுடன், அழற்சியையும் தடுக்கின்றது.
புற்றுநோய்கள் போன்ற பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கவும் உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |