செல்வ மகள் சேமிப்பு திட்டம்: தற்போதைய வட்டி வீதம் எவ்வளவு தெரியுமா?
பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு மத்திய அரசு வழங்கும் சிறு சேமிப்பு திட்டமே செல்வ மகள் சேமிப்பு திட்டம் ஆகும்.
இந்த திட்டத்தில் எப்படி இணைவது ? இதற்கான தகுதிகள் என்ன தெரியுமா? தற்போதைய இதன் வட்டி விகிதம் எவ்வளவு என்பது தொடர்பான முழுமையான விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா என குறிப்பிடப்படும் இத் திட்டத்தின் வட்டி விகிதம் முந்தைய காலாண்டில் இருந்து மாறாமல் இருக்கும் நிலையில் ஜூலை - செப்டம்பர் 2024 காலாண்டிற்கான வட்டி விகிதம் 8.2%ஆக அதிகரிக்கவுள்ளது.
சுகன்யா சம்ரிதி யோஜனா யார் தொடங்கலாம்?
10 வயது நிரம்பாத பெண் குழந்தைகளின் பெயரில் பாதுகாவலர் ஒருவர் இந்த கணக்கை ஆரம்பிக்க முடியும்.
முக்கிய விடயம் என்னவென்றால் இந்த திட்டத்தின் கீழ் கூட்டுக் கணக்குகளை திறக்க முடியாது.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 2 பெண் குழந்தைகளுக்கு மாத்திரமே கணக்கை ஆரம்பிக்க முடியும்.
ஆனால் முதல் பிரசவத்திலோ, இரண்டாவது பிரசவத்திலோ 2 பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால், இரண்டுக்கும் மேற்பட கணக்குகளை ஆரம்பிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
இதற்கு இரட்டையர் அல்லது மூன்று குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழுடன், பாதுகாவலரின் பிரமாணப் பத்திரத்தையும் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
ஒரு நிதியாண்டில் இந்த திட்டத்தின் கீழ் கணக்கை ஆரம்பிப்பதற்கு குறைந்தபட்சம் ரூ.250 செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த திட்டத்தில் வைப்பு செய்யப்புடும் பணத்திற்கு வருமான வரிச்சட்டம் 1961 பிரிவு 80சி-ன் கீழ் முதலீட்டாளர் ஒரு நிதியாண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் இத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் முதிர்வு தொகைக்கும் வரி விலக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.எந்தவொரு நிதியாண்டிலும் ரூ.1,50,000க்கு அதிகமாக வைப்புத்தொகை செலுத்தினால் அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
இத்திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர் ஒருவேளை மரணம் அடைந்தால், தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழை தயாரித்தவுடன் கணக்கு உடன் நடவடிக்கையில் கீழ் மூடப்படும்.
அதுமட்டுமன்றி குறித்த கணக்கில் இருக்கும் வைப்பு தொகை இறப்பு திகதி வரையிலான வட்டியுடன் சேர்த்து காப்பாளரிடம் கையளிக்கப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |