பழைய EPF கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றணுமா? எளிய வழி இது தான்!
மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுள் பொரும்பாலானவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரமே ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.
அப்படி புதிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த பின்னர் பழைய நிறுவனத்தின் பிஎப் கணக்கை புதிய நிறுவனத்தின் பிஎப் கணக்குடன் இணைக்கவில்லை என்றால் அதனை எவ்வாறு எளிமையாக இணைக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
வேலை அல்லது நிறுவனத்தை மாற்றும் போது எம்ப்ளாயி பிராவிடண்ட் ஃபண்ட் அக்கவுண்ட் (EPF) என்ன ஆகும் என்ற கவலை பலருக்கும் இருக்கும்.
ஆனால் புதிய வேலையில் இணையும் போது புதிய நிறுவனத்திற்கு உங்களுடைய அக்கவுண்ட்டை எளிமையான முறையில் இணைத்துக்கொள்ள எளிமையான வழிகள் காணப்படுகின்றது.
EPF என்ப்படுவது தொழில் புரிபவர்களுக்கு இந்திய அரசு மூலமாக வழங்கப்படும் ஒரு சேமிப்பு மற்றும் ஓய்வு கால முதலீட்டு திட்டம் ஆகும்.
ஊழியர்கள் ஓய்வு பெற்றதன் பின்னர் அவர்களின் ஓய்வு காலத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வேலை அல்லது நிறுவனத்தை மாற்றிய பிறகு பல ஊழியர்கள் தங்களுடைய EPF அக்கவுண்ட்டை மூடிவிட்டு புதிதாக ஒரு கணக்கை தொடங்குகின்றனர்.
எனினும் இதனால் முந்தைய கணக்குகளைில் நீங்கள் செய்த முதலீடுகளை இழக்க வேண்டி ஏற்படுகின்றது. எனவே உங்களுடைய EPF கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றுவதே இதற்கான சரியான தீர்வாக அமையும்.
அதனை எப்படி செய்வது?
முதவில் அதிகாரப்பூர்வ EPFO வெப்சைட்டுக்குள் சென்று உங்களுடைய UAN பயன்படுத்தி லாக்-இன் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் ‘Online Services’ என்ற ஆப்ஷனுக்கு சென்று, “One Member - One EPF Account (Transfer Request)” என்பதை தேர்வு செய்ய வேண்டும்.தேவையான விபரங்களை நிரப்பி அவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.
பின்னர் முன்கூட்டியே நிரப்பப்பட்ட படிவம் 13 -ஐ பெறுவதற்கு பதிவு செய்யப்பட்ட உங்களுடைய மொபைல் நம்பரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள OTP -ஐ என்டர் செய்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் படிவம் 13 -ஐ பிரிண்ட் செய்து, அதனை கையெழுத்திட்டு உங்களுடைய தற்போதைய நிறுவனத்தில் 10 நாட்களுக்குள் கையளிக்க வேண்டும்.
தற்போதைய நிறுவனம் இதற்கான அங்கீகாரத்தை வழங்கும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். அதன் போது ஒவ்வொரு அங்கீகார நிலையிலும் அது சம்பந்தமான SMS நோட்டிபிகேஷன்களை பெற்றக்கொள்ள முடியும்.
EPF கணக்கை டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு தேவையான ஆவணங்கள்
அடையாள சான்றிதழ் (ஆதார் அட்டை, PAN கார்டு போன்றவை).
தற்போதைய மற்றும் முந்தைய நிறுவனம் குறித்த விவரங்கள்.
வங்கி கணக்கு விவரங்கள்.
உங்களின் EPF தகவல்களை பார்ப்பதற்கு உங்களுடைய UAN மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி EPFO மெம்பர் போர்ட்டலில் லாகின் செய்ய வேண்டும்.
“Services” என்பதை கிளிக் செய்து, “Track Claim Status” என்ற ஆப்ஷனை தெரிவு செய்துக்கொள்ள வேண்டும்.
உங்களுடைய டிரான்ஸ்ஃபர் எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதை அறிய நீங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த போது உங்களுக்கு வழங்கப்பட்ட ரெஃபரென்ஸ் எண்ணை அதில் பதிவு செய்ய வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |