ஒரே ஒரு எலான் மஸ்க் போட்ட டிவீட்டால்.. மளமளவென சரிந்த ஷிபா இனு காயின்! கவலையில் முதலீட்டாளர்கள்
பல கிரிப்டோகரன்சிகள் அதிகளவில் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், பல முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அந்த வகையில், தற்போது வார இறுதியில் ஷிபா இனு காயினின் விலை யாரும் எதிர்பாராத வகையில், 50 சதவீதம் வரை உயர்ந்தது.
ஆனால், இந்த உயர்வு தற்போது நீடிக்கவில்லை. காரணம் அதற்கு எலான் மஸ்க் போட்ட ஒரே ஒரு ட்விட் தான். புதியதாக முதலீட்டாளர்கள் ஷிபா இனு கிரிப்டோகரன்சியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதனால், ஷிபா இனு சந்தை மதிப்பு 17.54 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது. இதன் அடிப்படையில் 11வது மிகப்பெரிய கிரிப்டோகரன்சியாக ஷிபா இனு உயர்ந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு நாளில் ஷிபா இனு-வின் விலை 0.000034 டாலராகச் சரிந்துள்ளது. இந்தச் சரிவுக்கு மிக முக்கியமான காரணம் எலான் மஸ்க் தான். கிரிப்டோகரன்சியை அதிகம் ஆதரித்து வரும் எலான் மஸ்க் பிட்காயின், டோஜ்காயின், ஷிபா இனு உட்படப் பலவற்றுக்கு ஆதரவாக டீவிட் செய்து வந்தார்.
இதனிடையே, ட்விட்டரில் இணையவாசி ஒருவர் ஷிபா இனு காயின் 50 சதவீத வளர்ச்சி பற்றி நீங்கள் எவ்வளவு முதலீடு செய்துள்ளீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு எலான் மஸ்க் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு ட்விட்டை போட்டுள்ளார்.
அதில் அந்த காயினில் எந்த விதமான முதலீடு செய்யவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், தனிப்பட்ட முறையில், எதிரியம் மற்றும் டோஜ்காயினில் மட்டுமே முதலீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த ட்வீட் வெளியான அடுத்த நிமிடமே ஷிபா இனு காயின் சரிய துவங்கியுள்ளது. இதனால்ம், முதலீட்டாளர்கள் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளதாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Hey @elonmusk How Much $Shib You Are Holding!!???
— Shiba Inu (@ShibaInuHodler) October 24, 2021