எலான் மஸ்கிற்கு எதிராக எழுந்த கண்டனம்... அவர் கட்டப்போகும் வரிதொகை மட்டும் எத்தனை கோடி தெரியுமா?
டெஸ்லா நிறுவன செயல் அதிகாரியான எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்களில் ஒருவர். இவரை அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் மாத இதழ், இந்த ஆண்டுக்கான சிறந்த நபராக சமீபத்தில் தேர்வு செய்திருந்தது.
எப்பொழுதும் ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு ஆதரவாக ஒரு பிரிவனர்களும்,. எதிராக ஒரு பிரிவினர்களும் கருத்துகளை பதிவிடுவது வழக்கம். இதனிடையே, இவர் சரியான வருமான வரி கட்டுவதில்லை என சமூக வலைத்தளங்களில் இவருக்கு எதிராக சிலர் கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி தரும் விதமாக எலான் மஸ்க் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், அவர் இந்த வருடம் ரூ .83,000 கோடி வரி செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த வரி தொகையை அவர் செலுத்தும் பட்சத்தில் அமெரிக்காவில் ஒரு தனிநபர் செலுத்திய அதிகபட்ச வரியாக அது இருக்கும்.
For those wondering, I will pay over $11 billion in taxes this year
— Elon Musk (@elonmusk) December 20, 2021