காதலியை பிரிந்து எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு! அவரே கூறிய காரணத்தை கேளுங்க....!
உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க், அவர் கிரிம்ஸ் என்பவரை காதலித்து வந்ததோடு, அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் சமீபத்தில் பிறந்தது.
இதனையடுத்து, இந்த காதல் ஜோடிகள் தற்போது பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
அதில், நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து கொண்டுதான் இருக்கிறோம். எங்கள் இருவருக்கிடையே சிறப்பான உறவு இருக்கிறது.
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களில் பணிச்சுமை நிலவுவதால் டெக்ஸாஸ் நகரில்தான் பெரும்பாலான நேரத்தை கழிக்கிறேன்.
வெளிநாடுகளுக்கு செல்கிறேன். என்னுடைய காதலி லாஸ் ஏஞ்சல்ஸில் வேலை செய்கிறார். தற்போது, அவர் என்னுடன் தான் வசித்துவருகிறார். எங்களின் அறைக்கு அருகே குழந்தையின் அறை உள்ளது.நாங்கள் பிரிந்தாலும் எங்கள் உறவும் காதலும் அப்படியே தொடரும்' எனக் கூறியுள்ளார்.