ஜெர்மனியில் டெஸ்லா தொழிற்சாலை திறப்பு - உற்சாகத்தில் மாஸாக குத்தாட்டம் போட்ட எலான் மஸ்க்
முதன் முறையாக ஜெர்மனியில் டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலை துவங்கப்பட்டத்தால் கொண்டாட்டத்தில் எலான் மஸ்க் துள்ளிக்குதித்து நடனமாடிய காட்சி வைரலாக பேசப்பட்டு வருகிறது.
உலகில் முன்னணி எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்த போராடி வருகிறது. இதனால், டெஸ்லா தனது உற்பத்தியை அதிகரிக்க சீனாவில் ஜிகாபேக்ட்ரியை உருவாக்கியது.
உற்சாகத்தில் ஆட்டம்
தற்போது, ஐரோப்பாவில் தொழிற்சாலையை ஜெர்மன் நாட்டின் தலைநகராக பெர்லினுக்கு அருகில் தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஐரோப்பி சந்தையில் டெஸ்லா நிறுவனம் வலுவாக கால் பதித்து இருக்கிறது.
உலகம் முழுவதுமே டெஸ்லா தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு உண்டு. இந்நிலையில், ஜெர்மனியில் டெஸ்லாவின் தொழிற்சாலை திறப்பு விழாவில் தயாரான கார்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நிகழ்வில் பங்கேற்றுள்ளார் எலான் மஸ்க்.
அப்போது அங்கு ஒலித்த இசையை கேட்டு குஷியில் குத்தாட்டம் போட்டுள்ளார். மேலும் தொழிற்சாலைக்கு இந்நாள் மிகவும் சிறப்பான நாள் என தெரிவித்துள்ளார் மஸ்க்
... And now we dance ? @elonmusk pic.twitter.com/TMk3BO1OdG
— Pranay Pathole (@PPathole) March 22, 2022