சிம்பிளா வீட்டிலேயே பூஜை செய்வது எப்படி? இந்த பொருள் இருந்தாலே போதும்
பொதுவாக சிலர் பூஜை என்றால் அது கோயிலில் தான் செய்ய வேண்டும் என அடிக்கடி கோயில்களுக்கு செல்வார்கள்.
உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் பொழுதும் பக்திக்காக உடலை வறுத்திக் கொண்டு கோயிலுக்கு செல்வார்கள்.
கடவுள் வறுத்திக் கொண்டு கோயில் வாருங்கள், பரிகாரங்கள் செய்யுங்கள் என்று எதிலும் கூறவில்லை. இதெல்லாம் நம்முடைய மன அமைதிக்காக நாம் செய்யும் செயற்பாடுகளாகும்.
சில வேளைகளில் எம்மால் முடியாத போது வீட்டிலேயே பூஜைகளை செய்யலாம். இதற்கான படிமுறைகளை மாத்திரமே தெரிந்து கொள்வது அவசியம்.
அந்த வகையில் பூசகர் இல்லாமல் வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு எப்படி எளிய முறையில் பிள்ளையாருக்கு எப்படி பூஜைகள் செய்வது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பிள்ளையார் வழிபாடு
1. பூஜை அன்று காலையில் எழுந்து நன்றாக குளித்த விட்டு விநாயகர் சதுர்த்தி தினமாக இருந்தால் களிமண் விநாயகரை வாங்க வேண்டும். பூஜைக்கு முதல் பிள்ளையாரை வாங்கி வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
2. கிழக்குப் புறம் பார்த்தப்படி தலைவாழை இலையை போட வேண்டும். அதன் மேல் நெல் பரப்பி, அதற்கு மேல் இன்னொரு நுனி இலை போட்டு பச்சரிசியை நிரப்பி, அதன்மேல் களிமண் பிள்ளையார் வைக்க வேண்டும்.
3. பிள்ளையாரை வைக்கும் பொழுது அவர் வடக்குப்பக்கம் அல்லது மேற்குப்பக்கம் பார்த்தப்படி இருக்க வேண்டும்.
4. மேற்குறிப்பிட்ட பக்கங்களை வைக்காமல் தெற்குப்பக்கம் பார்த்தப்படி வைக்கக் கூடாது.
5. வழக்கமாக நாம் பூஜைக்கு பயன்படுத்தும் மஞ்சள், சந்தனம், குங்குமத்தை பிள்ளையார் நெற்றியில் வைக்க வேண்டும்.
6. பிம்பத்தின் தொப்பிளில் நாணயத்தை வைத்து அதனை யாரும் பார்க்காத வகையில் மூடி வைப்பது சிறந்தது.
7. கடைசியாக பிள்ளையாருக்குப் பூணூல் அணிவித்து, வெள்ளெருக்கம் பூமாலை, அருகம்புல் மாலை போட்டு வழக்கமான பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |