டெல்லி கொடுத்த நம்பிக்கையால்.. குஷ்புவுக்கு உடனே புதிய பதவியா? அதிருப்தியில் கட்சியினர்கள்!
நடிகை குஷ்பு பாஜகவில் இருந்து விலகி குஷ்பு திமுகவில் இணைய உள்ளதாக பேசப்பட்டது. ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் குஷ்பு திடீரென டெல்லி சென்று திரும்பினார்.
இதையடுத்து, சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் பாஜகவில் பொறுப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் குஷ்புவுக்கு முக்கிய பதவி ஒன்றை வழங்க உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சுமார் மூன்று நாட்கள் வரை டெல்லியில் முகாமிட்டிருந்த குஷ்பு அங்கு பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோரை சந்தித்தார். அப்போது அவருக்கு தேசிய மகளிர் ஆணையத் தலைவர் பதவி கொடுப்பதாக வாக்குறுதி அளித்ததாக கூறப்பட்டது.
இதனையடுத்து மறுபடியும் சென்னை வந்த பிறகு பாஜக செயல்பாடுகளில் குஷ்பு தீவிரம் காட்டி வந்தார். இதற்கிடையே வாக்குறுதி அளிக்கப்பட்டே சுமார் ஒரு மாதம் ஆன நிலையில் எப்போது அறிவிப்பு வரும் என காத்திருக்கத் தொடங்கியுள்ளார் குஷ்பு.
அதேப்போல், பாஜகவில் சமீப காலமாக அதிலும் குறிப்பாக தமிழக பாஜகவில் கட்சியில் புதிதாக சேர்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளனர். எல்.முருகன் திடீரென பாஜகவின் தலைவராக்கப்பட்டார், இதே போல் பாஜகவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்த நயினால் நாகேந்திரன் பாஜக சட்டமன்ற குழு தலைவரானார்.
மேலும், கடந்த ஆண்டு கட்சியில் சேர்ந்த அண்ணாமலை தற்போது பாஜக மாநிலத் தலைவராகியிருக்கிறார். கட்சியில் சேர்ந்த சில மாதங்களே ஆன குஷ்புவுக்கு உயர் பதவியா? என்று இப்போதே கமலாலயத்தில் அதிருப்தி குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.