பராமரிப்பாளரை கண்ட மகிழ்ச்சியில் பிளறியபடி ஓடிவரும் யானை கூட்டம்... பல கோடி இதயங்களை நெகிழ வைத்த பாசம்
தாய்லாந்தில் உள்ள ஒரு சரணாலயத்தில் யானைகள் கூட்டம் திரும்பி வந்து தங்கள் பராமரிப்பாளரை நீண்ட மாதங்கள் கழித்து ஆசையாக அரவணைத்து கொள்ளும் காணொளி பலரின் இதயங்களை கொள்ளை கொள்ள செய்துள்ளது.
ஆற்று நீரில் நடந்து வரும் யானை கூட்டத்தையும், அவற்றுக்கு எதிரே சற்று தொலைவில் ஆற்றில் நிற்கும் அவற்றின் பராமரிப்பாளரையும் காணொளியில் காணலாம்.
பராமரிப்பாளர் தொலைவில் வரும் யானைகளை பார்த்து அதிக சத்தத்துடன் குரல் கொடுக்கிறார்.
Elephants reunite with their caretaker after 14 months..
— Buitengebieden (@buitengebieden_) December 23, 2021
Sound on pic.twitter.com/wSlnqyuTca
அவரது குரலை தூரத்திலிருந்தே அடையாளம் கண்டு கொண்ட யானை கூட்டம் பதிலுக்கு பிளறியபடி ஆற்று நீரில் நடக்கும் வேகத்தை கூட்டுகின்றன.
பின்னர் ஒரு கட்டத்தில் பராமரிப்பாளரின் அருகில் வந்ததும் யானை கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டு தங்கள் தும்பிக்கையால் தடவியும், பிளிறல் சத்தத்தை எழுப்பியும் அவர் மீது பாசத்தை பொழிகின்றன.