நாங்க இருக்கோம்... குட்டையில் சிக்கிய குட்டி யானை - ஒன்று சேர்ந்து காப்பாற்றிய யானை கூட்டம்!
குட்டையில் சிக்கிய குட்டி யானையை ஒன்று சேர்ந்து காப்பாற்றிய யானை கூட்டத்தின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குட்டையில் சிக்கிய குட்டி யானை
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும். குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன.
குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன. அதேபோல், தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், குட்டையில் தவறி விழுந்த குட்டி யானை வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டது. குட்டை சேற்றில் சிக்கிய குட்டி யானையை மீட்க இரண்டு யானைகள் முயற்சி செய்தன. ஆனால், முடியவில்லை. உடனே, யானைகள் குட்டையில் இறங்கி தன் தும்பிக்கையால் அந்த குட்டி யானையை மீட்டது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே நெகிழ்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.