பெயிண்டரிடம் கொஞ்சி கொஞ்சி விளையாடிய யானை - வைரலாகும் வீடியோ
பெயிண்டரிடம் கொஞ்சி கொஞ்சி விளையாடிய யானையின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெயிண்டரிடம் கொஞ்சி கொஞ்சி விளையாடிய யானை
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும்.
குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன. குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன. அதேபோல் தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
ஒரு பெயிண்டரிடம் குட்டி யானை கொஞ்சி கொஞ்சி விளையாடுகிறது. அவரிடம் சென்று கொஞ்சி விளையாட வேலி தடுப்பிலிருந்து காலை உள்ளே விட்டு வெளியே பார்க்கிறது. ஆனால், அந்த யானையால் முடியவில்லை.
இதனையடுத்து, அந்த நபர் எழுந்து யானையிடம் சென்றபோது, அந்த நபரிடம் யானை கொஞ்சி விளையாடியது. தற்போது இந்த க்யூட்டான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே நெகிழ்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
That one friend #elephant #Discovery #frie pic.twitter.com/bTRoZrm7kd
— M.K. Singh (@Dr_Rohansingh41) May 27, 2023