கிணற்றில் விழுந்த குட்டி யானை - தாய் யானையின் பாசப் போராட்டம் - வைரலாகும் வீடியோ
கிணற்றில் விழுந்த குட்டி யானையை காப்பாற்ற தாய் யானை நடத்திய பாசப் போராட்டம் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கிணற்றில் விழுந்த குட்டி யானை
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும். குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன. குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன.
அதேபோல் தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
தாய்லாந்தின் சாந்தபுரியில் கிணற்றில் குட்டியானை ஒன்று விழுந்துவிட்டது. இதனால், தாய் யானையால் தன் குட்டியை வெளியே கொண்டு வர முடியாமல் தவித்தது. இதைப் பார்த்த ஊர் மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குட்டி யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு கிணற்றை உடைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். இதனையடுத்து, கிணற்றுக்கருகில் ஒரு பெரிய பள்ளம் தோண்டப்பட்டு, கிணற்றின் ஒரு பகுதி உடைக்கப்பட்டது.
அப்போது, தன் குட்டியை மீட்க தாய் யானை அந்த பள்ளத்தில் இறங்கி கிணற்றிலிருந்து தன் தும்பிக்கையால் குட்டியை யானையை மீட்டு அழைத்துச் சென்றது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இதுதான் தாய் பாசம்... தாய்க்கு எதுவுமே நிகர் கிடையாது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
WELL DONE: A baby elephant was rescued from a well in Chanthaburi, Thailand, as its mother watched close by.
— ABC News (@ABC) May 19, 2023
Volunteers used machinery to dig around the well and free the calf, before the pair walked away safely together. https://t.co/lGdedZzoT4 pic.twitter.com/UUnr2Nq3JA