கும்கி படம்போல் பயங்கர ஆக்ரோஷமாக சண்டையிட்ட யானைகள் - அதிர்ச்சி வீடியோ!
கும்கி படத்தில் வருவதுபோல், ஆக்ரோஷமாக முட்டிக்கொண்டு சண்டை போட்ட யானைகளின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரமாக சண்டையிட்ட யானைகள் -
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும்.
குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன. குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
இரண்டு யானைகள் சாலையில் பயங்கரமாக முட்டிக்கொண்டு சண்டையிட்டன. தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் என்ன இது... ‘கும்கி’ படம் போல் இந்த இரு யானைகள் சண்டையிட்டுக் கொள்கிறதே என்று அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Jumbos fight, jungle shivers#elephant #odisha #jungle #ganesha #india pic.twitter.com/AgOdEiQ6q7
— Awaz the voice assam (@AssamAwaz) May 17, 2023