தாய் யானையிடம் கொஞ்சி விளையாடிய குட்டி யானை - வைரலாகும் வீடியோ
தாய் யானையிடம் கொஞ்சி விளையாடிய குட்டி யானையின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தாய் யானையிடம் கொஞ்சி விளையாடிய குட்டி யானை
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும். குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன.
குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்
தாய் யானை ஒன்று தூங்குவதற்காக தரையில் சாய்கிறது. ஆனால், குட்டி யானை நீ தூங்கவே கூடாது. எழுந்திரு... என்று தாய் யானையை தூங்கவிடாமல் செய்கிறது. நீ அடி வாங்கப்போற பாரு... சொல்ற மாதிரி தாய் யானை தரையில் படுக்க, உடனே குட்டியானை தாய் மீது ஏறி சறுக்கி விளையாடுகிறது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே... என்ன ஒரு அழகு.. பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறது என்று மனம் குளிர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Mother's Day aren't for animals. But lest we forget that #animal too have feeling. Look at how baby elephant is playing around with mother. #love #nature. #ElephantThisTime #CBSE #CBSEresults2023 #CBSENews #CBSEBoardExam2023 #CycloneMocha #ExitPolls pic.twitter.com/XciWuuEhNH
— Pradhuman Phukan (@PhukanPradhuman) May 12, 2023