200 லிட்டர் பீர் குடித்து மட்டையான யானை - வைரலாகும் வீடியோ
200 லிட்டர் பீர் குடித்து மட்டையான யானையின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
200 லிட்டர் பீர் குடித்து மட்டையான யானை
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும். குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன.
குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன.

அப்படித்தான் சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், டி.ஆர்.சி. மலைவாழ் கிராமத்தில் யானை ஒன்று புகுந்தது. யானையைப் பார்த்ததும் கிராம மக்கள் பயந்து அலறி அடித்து ஓடிவிட்டனர்.
அப்பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 200 லிட்டர் கார்ன் பீர் அனைத்தையும் யானை குடித்தது. இதனையடுத்து, போதை தலைக்கேறியதும் யானை தரையில் மட்டையாகிவிட்டது.

போதையில் மட்டையான யானை மீது அந்த கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் யானை மீது ஏறியும், சருக்கியும் விளையாடினர். ஆனாலும், அந்த யானை போதையில் மயங்கிய நிலையில் படுத்திருந்தது.
ஒரு கட்டத்தில் எழுந்த யானை, எழ முடியாமல் மீண்டும் தரையில் விழுந்தது.
இதை கிராம மக்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல தங்கள் கமெண்ட்களை அள்ளி தெறித்து வருகின்றனர்.
An elephant entered a village in DRC and the villagers ran away. He then drank all 200 litres of corn beer meant for sale. He is now drank and powerless? pic.twitter.com/S8NbeovsZf
— lizah mutuku (@l_lizah) May 8, 2023