கிராமவாசிகளின் செயலால் அலறியடித்து ஓடும் யானை! மில்லியன் இதயங்களை நிலைகுலைய வைத்த காட்சி
சமீப காலமாக யானைகள் குறித்த செய்திகள் அதிகம் வெளிவந்த வண்ணம் உள்ளன. தற்போது யானை ஒன்றை ஊர் மக்கள் ஒன்று கூடி துன்புறுத்தும் செயல் இணையவாசிகளை நிலைகுலைய வைத்துள்ளது.
இந்திய வனத்துறை அதிகாரி சுதா ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
No words!! Wondering who is the animal here ? pic.twitter.com/LAcY276HdX
— Sudha Ramen IFS ?? (@SudhaRamenIFS) March 17, 2021
அந்த வீடியோவில் இரவில் ஊரில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்று கூடி உற்சாகமாக யானை ஒன்றை ஓட ஓட விரட்டும் செயல் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். ஊர் மக்கள் இவ்விதம் செய்வது தவறு எனவும் வனவிலங்குளை காப்பது நமது கடமை எனவும் பதிவிட்டு வருகின்றனர்.