viral video: காட்டில் தனியாக ஓய்வெடுக்கும் ஆண் யானை... பிரம்மிக்க வைக்கும் காட்சி!
அடர்ந்த காட்டில் தனியாக ஓய்வெடுக்கும் ஆண் யானையொன்றின் பிரமிக்க வைக்கும் காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
இயற்கையின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றான யானையானது தரைவாழ் உயிரினங்களிலேயே பெரியது என்ற பட்டத்தை பெற்றுள்ளது.
பார்க்க பார்க்க அலுக்காத ஜீவன்களில் யானைகளுக்கு முக்கிய இடம் உண்டு. உலகில் ஆயிரகணக்கான யானைகள் இருந்தாலும், ஆசிய யானைகள் மற்றும் ஆபிரிக்க யானைகள் என்ற இரண்டு வகைகளுக்குள் அடக்கப்படுகின்றன.
மனிதனின் உடலில் உள்ள மொத்த சதையைவிட யானையின் தும்பிக்கையில் உள்ள சதைகள் அதிகமாம்.மொத்தம் 40,000 தசைகளால் ஆனது.
ஒருநாளைக்கு 16 மணி நேரத்தை உணவு சேகரிப்பதற்கு மட்டுமே செலவு செய்கிறது யானை. யானைகளின் செரிமானத்திறன் மிக மந்தமானது. அவை உண்ணும் உணவில் வெறும் 40 விழுக்காடே செரிமானமாகிறது.
எனவே அளவுக்கு அதிகப்படியான உணவை இவை உட்கொள்ள வேண்டியுள்ளது. வளர்ந்த யானை நாள் ஒன்றிற்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரையான உணவை உட்கொள்கிறது.
இப்படி இயற்கையின் பிரமிக்க வைக்கும் படைப்பான யானை தனிமையில் ஓய்வெடுக்கும் அழகிய காணொளியொன்று இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |