வெள்ளத்தில் தத்தளித்த யானை: மீட்க சென்ற குழுவினர் உயிரிழந்த சோகம்! அதிர்ச்சி காட்சி
இந்தியாவில் பருவமழை காரணமாக பல்வேறு நதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த வாரத்தில் மகாநதியில் சிக்கிய யானையைக் காப்பாற்ற சென்ற மீட்புக் குழுவினர் உயிரிழந்தது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஹீராகுட் அணை தன்னுடைய முழு கொள்ளளவை எட்டியதால் அதிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்படடதால், மகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் முண்டலி பாலம் அருகே மகாநதியை கடக்க முயன்ற 17 யானைகளில் மூன்று யானை மட்டும் சிக்கிக்கொண்டுள்ள நிலையில் அதனைக் காப்பாற்ற மீட்பு குழுவினர் சென்றுள்ளனர்.
மீட்புக் குழுவினர் சென்ற படகு கட்டுப்பாட்டை இழந்து, விபத்தில் சிக்கியுள்ளது. மீட்பு குழுவில் பயணித்த அதிகாரிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயணித்த ஊடகவியலாளர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
சிக்கிய மூன்று யானைகளில் இரண்டு யானைகள் தடுமாறி கரையேறிய நிலையில் ஒரே ஒரு யானை மட்டும் 6 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது. 20 மீட்டரை கடந்திருந்தால் அந்த யானை கரையை அடைந்திருக்கும்.
யானைக்கு தேவையான உணவுகளை அளித்து, வலை பாதுகாப்பு போட்டு அதனை பத்திரமாக ஒரு இடத்தில் நிலை நிறுத்தி வைத்துள்ள வனத்துறையினர், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
I had posted this just to sensitise how not to rescue an elephant or go live reporting on wildlife.Many friends commented rightly on this. Three precious lives lost. May their soul rest in peace ??
— Susanta Nanda IFS (@susantananda3) September 25, 2021
And at the end a big lesson- "There is no story bigger than one's life". https://t.co/YTwu0eMNUT