மின்வேலியில் கால் வைத்த காட்டு யானை! அடுத்த என்ன நடந்தது தெரியுமா?
காட்டு யானை ஒன்று முன்னெச்சரிக்கையுடன் மின் கம்பியை தனது காலால் சோதனை செய்த பின்பு சாமர்த்தியமாக தாண்டும் காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
யானைகளின் தொந்தரவு தாங்கமுடியாமலும், அவை சாலைக்கு வராமல் இருப்பதற்கு காடுகளின் வேலியில் மின்சாரம் பாயும் கம்பியினை வைத்து வேலி அமைத்து வருவதை நாம் அவ்வப்போது பார்க்க முடிகின்றது.
இத்தருணத்தில் பல யானைகள் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் அவ்வப்போது நாம் கேள்விப்பட்டு வருகின்றோம். ஆனால் இங்கு யானை மாறாக முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வேலியை தாண்டியுள்ளது.
காடுகளின் ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் வேலியில் மின்சாரம் பாய்கின்றதா என்பதை தனது காலால் சோதனை செய்து பார்க்கின்றது. இதனை அவதானித்த வாகன ஓட்டிகளும் தூரத்தில் ஒதுங்கி நிற்கின்றனர்.
பின்பு சோதனையை முடித்த யானை கம்பீரமாக அந்த வேலியை மிதித்து மிகவும் கெத்தாக தாண்டிச் சென்றுள்ளது. இக்காட்சியை பகிர்ந்து போன ஜென்மத்தில் எலக்டீரிஷியனா இருந்திருக்குமோ இந்த யானை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வைரலாகி வருகின்றது.
போன ஜென்மத்துல செல்லம் 'எலக்ட்ரீஷனா' இருந்திருக்குமோ? pic.twitter.com/279ww3yN7w
— Fᵢₗₘ Fₒₒd & Fᵤₙ (@FiImFoodFun) October 30, 2022