ரொமான்ஸாக புகைப்படம் எடுத்த புதுமணத் தம்பதி! பின்னே நின்ற யானை செய்த பகீர் சம்பவம்
திருமணமான புதுமணத் தம்பதிகள் போட்டோ ஷுட் எடுப்பதற்கு யானை முன்பு நின்ற நிலையில், திடீரென யானை செய்த செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புதுமண ஜோடியின் போட்டோ ஷுட்
இன்றைய காலகட்டத்தில் திருமணத்தை சுற்றியுள்ள விஷயங்களான திருமண போட்டோஷூட், பத்திரிக்கை உள்ளிட்ட பல விஷயங்கள், பெரிய அளவில் புதுமை கலந்து இருக்கும் பட்சத்தில் அவை நெட்டிசன்கள் மத்தியில் கூட அதிக கவனம் பெற்றும் வருகின்றது.
இவ்வாறு திருமண ஜோடிகள் போட்டோ ஷூட் எடுக்கும் சமயத்தில் நடக்கும் வேடிக்கையான விஷயங்கள் கூட இணையத்தில் அவ்வப்போது வைரலாகி வருகின்றது.
இங்கும் அதே போன்ற சம்பவம் ஒன்றினைக் காணலாம். கேரள மாநிலத்தில் புதுமண ஜோடி ஒன்று யானையின் முன்பு நின்று கொண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துக் கொண்டிருந்துள்ளனர்.
அப்பொழுது யாரும் அறிந்திடாத தருணத்தில், புதுமண ஜோடிகளின் பின்னே நின்ற யானை, திடீரென தென்னை மட்டை ஒன்றினை எடுத்து குறித்த ஜோடிக்கு நேராக வீசியுள்ளது.
மட்டை வந்த வேகத்தில் மாப்பிள்ளையின் முதுகில் லேசாக உரசி, அவருக்கும் மணப்பெண்ணுக்கு இடையே உள்ள இடைவெளி மூலம் வேறு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து சென்றது.