ஆக்ரோஷமாக வந்த யானை: நடுநடுங்கிய மனிதர்கள்! தலைகீழாக கவிழ்ந்த ஜுப்
தென்னாப்பிரிக்காவின் செலாட்டி கேம் ரிசர்வ் (South Africa's Selati Game Reserve) பகுதியில், சஃபாரி ஜீப்பில் சென்ற பயணிகள் மீது கோபமடைந்த யானை ஒன்று சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
யானையின் ஆக்ரோஷத் தாக்குதல் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது, அதில் கோபமான யானை, சுற்றுலாப் பயணிகளிடம் வந்து அவர்களின் சஃபாரி ஜீப்பை மோதித் தள்ளுவதைப் பார்க்கும் போது திகிலாக இருக்கிறது.
க்ரூகர் தேசிய பூங்காவின் (ruger National Park) எல்லையில் அமைந்துள்ள தென்னாப்பிரிக்காவின் செலாட்டி கேம் ரிசர்வ் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பயிற்சி வழிகாட்டிகள் குழு ஒன்று காட்டில் சஃபாரி செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜீப் குறுகலான பாதையில் சென்று கொண்டிருந்த போது, புதர்களுக்குள் இருந்து காட்டு யானை ஒன்று ஜீப்பின் மீது பாய்ந்தது. அடுத்து என்ன நடந்தது? இதோ வீடியோ...
இந்த வீடியோவை EcoTraining வழிகாட்டிகள் எடுத்ததாக டெய்லி மெயில் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. 13 அடி உயரமுள்ள யானை ஜீப்பை எப்படி கவிழ்த்ததை இக்காட்சி காட்டுகிறது. ஜீப்பின் பின்னால் ஒரு சஃபாரி வாகனம் இருந்தது, பீதியடைந்த காவலர் "வெளியே போ, வெளியேறு, வெளியேறு" என்று கத்துவது கேட்டது.
பயிற்சி வழிகாட்டிகள் ஆக்ரோஷமான யானையிடம் இருந்து தப்பி ஓடிவிட்டனர், மேலும் அவர்கள் அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும், அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
Too much intrusion will take your life in Wilderness. However, wild animals keeps on forgiving us since long.#responsible_tourism specially wildlife tourism should be educational rather recreational.
— WildLense® Eco Foundation ?? (@WildLense_India) November 30, 2021
हांथी के इतना घुसा नही जाता ? watch second video too pic.twitter.com/AOKGZ2BAjB